L294 - தரைக்கடியில் தங்கம்
கதாசிரியர் கோசினியோடு கரம் கோர்த்து மோரிஸ் உருவாக்கிய பல classic கதைகளுள் "தரைக்கடியில் தங்கம்" ஒன்று ! அமெரிக்காவைப் புயலாய் உலுக்கிய எண்ணெய் வள தேடலைப் பின்னணியாகக் கொண்டு அதனுள் லக்கி & ஜாலியை உலவ விட்டுள்ளனர் ! So பார்வைக்கு இதுவொரு கார்ட்டூன் கதையாகத் தெரிந்தாலும், கொஞ்சம் வரலாறு ; நிறைய பகடி ; மெலிதான படிப்பினை என நிறைய சமாச்சாரங்கள் இங்கே பின்னணியில் உள்ளதை உணர முடியும் !