L291 - ஒரு திரைவிலகும் நேரம்
அக்டோபர் & டிசம்பரில்(2016) இதன் துவக்க பாகங்கள் சரமாரியான கேள்விகளையும் முடிச்சுகளையும் முன்வைத்துச் சென்றிருந்தன ! துவக்கத்தில் மர்மக்கதை / டிடெக்டிவ் த்ரில்லர் போலக் காட்சி தந்து, போகப் போக திகில் + ஹாரர் + கஸ்பென்ஸ் என்று பயணித்து நம்மிடையே ஒரு இனம்புரியா எதிர்பார்ப்பைத் தூண்டி விடுவதில் கதாசிரியர் + ஓவியர் + கலரிங் ஆர்ட்டிஸ்ட்கள் வெற்றி கண்டிருந்தனர் ! பாகம் # 3-க்குள் பக்கங்கள் நகர, நகர கதாசிரியரின் கற்பனைக்களங்கள் விஸ்வரூபமெடுப்பதைப் பார்க்க முடிந்த போது ‘ஆ‘வென வாயைப் பிளக்கத் தான் முடிந்தது ! ஒற்றைப் போடு போடுவதில் - கதையின் முடிச்சுகள் ஒன்று பாக்கியில்லாமல் தீர்வு காண்பதை masterstroke என்று வர்ணிப்பதா ? வேறு விதமாகப் பார்ப்பதா ? என்று புரியவில்லை ! அந்தப் பணியை நீங்கள் கையில் எடுத்துக் கொள்வதே நியாயமாகயிருக்குமென்று நினைக்கிறேன்! ‘ஒரு திரைவிலகும் நேரம்‘- நாம் வாய் பிளக்கும் நேரமும் கூட!