M389 - என் ராஜ்ஜியமே ஒரு கேரட்டுக்கு
வழக்கமான காமெடிக் களங்களை நம்பிடாமல் ஒரு மாயாஜால லோகம் போலவொரு பாக்தாத்தை உருவாக்கி அதனில் காமெடிக் கூத்துகளை சரவெடியாய் அவிழ்த்து விடுவதென்பது லேசுப்பட்ட காரியமல்லவென்பேன் ! அதிலும் வார்த்தை விளையாட்டுக்களுக்கு ஏகமாய் முக்கியத்துவம் தந்து, கதைக்குப் பொருந்திப் போவது போல வரிகளை அமைப்பதிலும் கதாசிரியர் சிலம்பாட்டம் ஆடிடுவது வாடிக்கை ! இம்முறையும் அதே நிலவரமே ! ஒரே மாற்றம்- முதல் கதையின் நீளம் ! வழக்கமான 4/6 பக்கக் கதையாக அல்லாது 20 பக்கங்கள் ஓடிடுகிறது ! “என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு” – மனிதனின் பேராசைகளையும், பலவீனங்களையும் புன்னகைக்கும் விதத்தில் சொல்ல முற்படுமொரு முயற்சி !