முத்து காமிக்ஸின் இதழ் # 3 ஆக வெளிவந்த இந்த சாகஸத்திற்கு இது எத்தனையாவது மறுபதிப்பு? என்ற பொதுஅறிவுக் கேள்வியை நிச்சயமாய் நான் கேட்கப் போவதில்லை becos – பதில் எனக்கே தெரியாது! ஆனால் one last time என்பது மாத்திரம் உறுதி! புராதனம் ‘கம கமக்கும்‘ நாச அலைகளின் அந்தத் தமிழாக்கத்தை – நமது பால்ய நினைவுகளின் நறுமணம் வெற்றி கண்டிடும் என்ற நம்பிக்கையில் மேலோட்டமான பட்டி-டிங்கரிங்கைத் தவிர்த்து வேறெதுவும் செய்திருக்கவில்லை! ஆனால் நியாயமாகப் பார்த்தால் அந்த ஹைதர் அலி பருவத்து மொழிபெயர்ப்பிற்குக் கல்தா கொடுத்து விட்டு – புதியதொரு நடையை நல்கியிருக்க வேண்டும்! துரதிர்ஷ்டவசமாய் நேரமின்மை ஒரு தடிமனான தடையாகி வருவதால் அது சாத்தியப்படவில்லை!