Logo

L293 - இரும்புக்குதிரையில் ஒரு தங்கப்புதையல்

Hero

இந்த இரவுக்கழுகாரின் சாகசத்தில், தண்டவாளங்களை அதிர செய்யும் இரும்புக்
குதிரையாருக்குமொரு முக்கிய பங்குள்ளது ! நமது ரேஞ்சர்கள் அரிதாரங்களின்றி, அக்மார்க் ரேஞ்சர்களாகவே பட்டையைக் கிளப்பக் காத்துள்ளனர்  இம்மாதம் ! கதையின் முதல் பக்கத்திலிருந்தே டெக்ஸோடு - வெள்ளி முடியாரும் ஒட்டிக் கொண்டிருக்க, "சுப மங்களம்" போடும் வரையிலும் மனுஷன் லொங்கு லொங்கென்று குதிரையை ஒட்டித் திரிகிறார் ; நாமோ - அவரையே  ஒட்டித் திரிகிறோம் ! சற்றே கீச்சலான பானிச் சித்திரங்கள் இந்த சாகசத்துக்கெனப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கார்சனின் அழகு வதனம் எக்ஸ்ட்ரா அழகாய்த் தெரிவது போலத் தோன்றியது எனக்கு ! அந்த expressive முகத்தில் நெளியும் குசும்பு ; கடுப்பு ; நையாண்டி என சகலமுமே சற்றே தூக்கலாய்த் தெரிந்ததைக் கதை முழுவதிலும் கவனிக்கலாம் ! பற்றாக்குறைக்கு நன்றாகவே ஏறிப் போனதொரு முன்நெற்றியும், குறு குறு ஆட்டு தாடியும், ஓவியர் ஆர்ட்டிசின் புண்ணியத்தில் ஜொலிப்பதை ரசிக்கலாம் !
 
கதை ஆரம்பமே வித்தியாசமாய் இருந்தது ! வழக்கமாய் குதிரைகளில் பிட்டங்களைத் தேய்த்துத் திரியும் நம்மவர்கள் ஒரு இரவு ரயிலில் சலம்பிக் கொண்டே பயணிக்கின்ற கதைக்குள் புகுந்த பொழுது கதாசிரியர் நிஸ்ஸியின் ஜெட்வேகக் களமும், ஸ்க்ரிப்டும் அதிரச் செய்ய, ஓவியரின் அந்த breezy பாணியும் உற்சாகம் ஊற்றெடுக்கச் செய்ய - 224 பக்கங்களையும் வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடந்திட இயன்றது ! துளி கூடத் தொய்வின்றி, பர பரவென்று பட்டாசாய்ப் பொறிகிறது - "இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்"!! So வந்துட்டார்னு சொல்லலாம் ; அதிரடியாய்த் திரும்பவும் வந்துட்டார்னு சொல்லலாம் !! 

சமீபத்திய ஹீரோக்கள்

சிறப்பு புத்தகங்கள்